caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Furqaan அத்தியாயம், வசனம் 32

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 42 · 25:32

وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْلَا نُزِّلَ عَلَيْهِ ٱلْقُرْءَانُ جُمْلَةً وَٰحِدَةً كَذَٰلِكَ لِنُثَبِّتَ بِهِۦ فُؤَادَكَ وَرَتَّلْنَٰهُ تَرْتِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிராகரிப்பாளர்கள் கூறினர்: இந்த குர்ஆன் இவர் (-இந்த தூதர்) மீது ஒரே தடவையில் ஒட்டு மொத்தமாக இறக்கப்பட வேண்டாமா! இவ்வாறுதான் (நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினோம்) ஏனெனில், அதன் மூலம் உமது உள்ளத்தை உறுதிப்படுத்துவதற்காக. இன்னும் இதை சிறிது சிறிதாக (உமக்கு ஓதி)கற்பித்(து விவரித்)தோம்.
Tamil Translation - Omar Sharifநிராகரிப்பாளர்கள் கூறினார்கள்: “இவர் (-இந்த தூதர்) மீது இந்த குர்ஆன் ஒரே தடவையில் ஒட்டு மொத்தமாக இறக்கப்பட வேண்டாமா!” இவ்வாறுதான் (நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினோம். அது) ஏனெனில், அதன் மூலம் உமது உள்ளத்தை உறுதிப்படுத்துவதற்காக ஆகும். இன்னும், இதை சிறிது சிறிதாக (உமக்கு ஓதிகாண்பித்து அதன் விளக்கத்தையும்) கற்பித்(து கொடுத்)தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi32. (நபியே!) எவர்கள் (உம்மை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் ‘‘ இந்த வேதம் முழுவதும் ஒரே தடவையில் அவர்மீது இறக்கப்பட வேண்டாமா?'' என்று கூறுகின்றனர். (இதை) இவ்வாறு நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி (வரிசை முறைப்படி) ஒழுங்குபடுத்துவதெல்லாம் உமது உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே ஆகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70