وَقَدِمْنَآ إِلَىٰ مَا عَمِلُوا۟ مِنْ عَمَلٍ فَجَعَلْنَٰهُ هَبَآءً مَّنثُورًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionசெயல்களில் அவர்கள் செய்ததை நாம் (அதற்கு கூலி கொடுப்பதற்காக) நாடுவோம். பிறகு, அதை பரத்தப்பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம்.
Tamil Translation - Omar Sharif(அல்லாஹ்வை நிராகரித்த) அவர்கள் செய்த (நற்) செயல்களை நாம் (அவற்றுக்கு கூலி கொடுப்பதற்காக) நாடுவோம். ஆக, அவற்றை பரத்தப்பட்ட புழுதியாக (நன்மைகள் இல்லாமல்) ஆக்கிவிடுவோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi23. (இம்மையில்) அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்களை நாம் நோக்கினால் (அதில் ஒரு நன்மையும் இல்லாததனால்) பறக்கும் தூசிகளைப் போல் அவற்றை நாம் ஆக்கிவிடுவோம்.