caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Noor அத்தியாயம், வசனம் 60

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 102 · 24:60

وَٱلْقَوَٰعِدُ مِنَ ٱلنِّسَآءِ ٱلَّٰتِى لَا يَرْجُونَ نِكَاحًا فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ أَن يَضَعْنَ ثِيَابَهُنَّ غَيْرَ مُتَبَرِّجَٰتٍۭ بِزِينَةٍ وَأَن يَسْتَعْفِفْنَ خَيْرٌ لَّهُنَّ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபெண்களில் திருமணத்தை ஆசைப்படாத வயது முதிர்ந்தவர்கள் அவர்கள் அலங்காரங்களுடன் வெளியே வராமல் (தங்களது பர்தாவின் மேல் உள்ள) அவர்களின் துப்பட்டாக்களை (அணியாமல்) கழட்டுவதில் அவர்கள் மீது குற்றமில்லை. அவர்கள் பேணுதலாக இருப்பது (-மேல் துப்பட்டாக்களை எல்லோர் முன்பும் அணிந்து இருப்பது) அவர்களுக்கு சிறந்தது. அல்லாஹ் நன்கு செவியேற்பவன், நன்கறிந்தவன்.
Tamil Translation - Omar Sharifபெண்களில் திருமணத்தை ஆசைப்படாத வயது முதிர்ந்தவர்கள் (தங்களது பர்தாவின் மேல் உள்ள) அவர்களின் துப்பட்டாக்களை (அணியாமல்) கழட்டுவதில் அவர்கள் மீது குற்றமில்லை. அவர்கள் அலங்காரங்களுடன் வெளியே வராமல் இருக்க வேண்டும். இன்னும், அவர்கள் பேணுதலாக இரு(ந்து துப்பட்டாக்களை எல்லோர் முன்பும் அணிந்து இரு)ப்பதுதான் அவர்களுக்கு சிறந்ததாகும். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi60. திருமண விருப்பமற்ற முதிர்ந்த வயதுடைய (நடமாட முடியாது) உட்கார்ந்தே இருக்கக்கூடிய கிழவிகள், தங்கள் அழகைக் காண்பிக்க வேண்டுமென்ற நோக்கமின்றித் தங்கள் மேல் ஆடைகளைக் களைந்து விட்டிருப்பதில் அவர்கள் மீது குற்றமில்லை. இதையும் அவர்கள் தவிர்த்துக் கொள்வதே அவர்களுக்கு மிக்க நன்று. அல்லாஹ் (அனைத்தையும்) நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70