وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنكُمْ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِى ٱلْأَرْضِ كَمَا ٱسْتَخْلَفَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ ٱلَّذِى ٱرْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّنۢ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِى لَا يُشْرِكُونَ بِى شَيْـًٔا وَمَن كَفَرَ بَعْدَ ذَٰلِكَ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْفَٰسِقُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களில் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் செய்தவர்களுக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான்: இவர்களுக்கு முன்னுள்ளவர்களை (பூமியின்) பிரதிநிதிகளாக ஆக்கியது போன்று இப்பூமியில் இவர்களை பிரதிநிதிகளாக ஆக்குவான். இன்னும் இவர்களுக்காக அவன் திருப்தி கொண்ட இவர்களுடைய மார்க்கத்தை இவர்களுக்கு பலப்படுத்தித் தருவான். இவர்களது பயத்திற்கு பின்னர் நிம்மதியை இவர்களுக்கு மாற்றித்தருவான். இவர்கள் என்னை வணங்குவார்கள், எனக்கு எதையும் இணைவைக்க மாட்டார்கள். இதற்குப் பின்னர் யார் நிராகரிப்பார்களோ அவர்கள்தான் பாவிகள்.
Tamil Translation - Omar Sharifஉங்களில் எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் செய்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான்: அவர்களுக்கு முன்னுள்ளவர்களை (பூமியின்) ஆட்சியாளர்களாக ஆக்கியது போன்று இப்பூமியில் அவர்களை ஆட்சியாளர்களாக ஆக்குவான். இன்னும், அவர்களுக்காக அவன் திருப்தியடைந்த அவர்களுடைய மார்க்கத்தை அவர்களுக்கு பலப்படுத்தித் தருவான். அவர்களது பயத்திற்கு பின்னர் நிம்மதியை அவர்களுக்கு மாற்றித்தருவான். அவர்கள் என்னை வணங்குவார்கள், எனக்கு எதையும் இணைவைக்க மாட்டார்கள். இதற்குப் பின்னர் யார் நிராகரிப்பார்களோ அவர்கள்தான் பாவிகள்.
Tamil Translation - Abdulhamid Baqawi55. (மனிதர்களே!) உங்களில் எவரேனும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து வந்தால், அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை(ப் பூமிக்கு) அதிபதிகளாக்கியது போன்றே இவர்களையும் நிச்சயமாகப் பூமிக்கு அதிபதியாக்கி வைப்பதாகவும், அவன் இவர்களுக்கு விரும்பிய மார்க்கத்தில் இவர்களை உறுதியாக்கி வைப்பதாகவும், அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு இவர்களுடைய பயத்தை மாற்றி விடுவதாகவும் நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். (அன்றி) அவர்கள் தன்னையே வணங்கும்படியாகவும், எதையும் தனக்கு இணையாக்கக் கூடாது என்றும் அவன் கட்டளையிட்டிருக்கிறான். இதன் பின்னர், எவரேனும் நிராகரிப்பவர்களாகி விட்டால் நிச்சயமாக அவர்கள் பெரும் பாவிகள்தான்.