caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Noor அத்தியாயம், வசனம் 36

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 102 · 24:36

فِى بُيُوتٍ أَذِنَ ٱللَّهُ أَن تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا ٱسْمُهُۥ يُسَبِّحُ لَهُۥ فِيهَا بِٱلْغُدُوِّ وَٱلْـَٔاصَالِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அந்த விளக்கு) இறை இல்லங்களில் (-மஸ்ஜிதுகளில் எரிக்கப்படுகிறது). அவை உயர்த்திக் கட்டப்படுவதற்கும் அவற்றில் அவனது திருப்பெயர் நினைவு கூரப்படுவதற்கும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (பல ஆண்கள்) அவனை துதிக்கின்றனர் (-தொழுகின்றனர்)
Tamil Translation - Omar Sharif(அந்த விளக்கு) இறை இல்லங்களில் எரிக்கப்படுகிறது. அவை உயர்த்தி கட்டப்படுவதற்கும் அவற்றில் அவனது பெயர் நினைவு கூறப்படுவதற்கும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமினான ஆண்கள்) அவனை துதித்து தொழுகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi36. (அவ்விளக்குகள்) வீடுகளில் இருக்கின்றன. அவ்வீடுகள் அவற்றில் அல்லாஹ்வின் திருப்பெயர் கூறப்படவும், அதைக் கண்ணியப்படுத்தப்படவும் அவன் கட்டளையிட்டிருக்கிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்துகொண்டு,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70