رِجَالٌ لَّا تُلْهِيهِمْ تِجَٰرَةٌ وَلَا بَيْعٌ عَن ذِكْرِ ٱللَّهِ وَإِقَامِ ٱلصَّلَوٰةِ وَإِيتَآءِ ٱلزَّكَوٰةِ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ ٱلْقُلُوبُ وَٱلْأَبْصَٰرُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபல ஆண்கள் (அங்கு தொழுகின்றனர்.) வர்த்தகமோ விற்பனையோ அல்லாஹ்வின் நினைவை விட்டும் தொழுகையை நிலை நிறுத்துவதை விட்டும் (வழிபாட்டை) அல்லாஹ்விற்கு தூய்மையாக செய்வதை விட்டும் அவர்களை திசை திருப்பி விடாது. அவர்கள் ஒரு நாளை பயப்படுவார்கள். அதில் (-அந்நாளில்) உள்ளங்களும் பார்வைகளும் தடுமாறும்.
Tamil Translation - Omar Sharif(இறை இல்லங்களில் தொழுகின்ற) ஆண்கள் - வர்த்தகமோ விற்பனையோ அல்லாஹ்வின் நினைவை விட்டும் தொழுகையை நிலை நிறுத்துவதை விட்டும் ஸகாத் கொடுப்பதை விட்டும் (இன்னும் வணக்க வழிபாடுகளை அல்லாஹ்விற்கு மட்டும் தூய்மையாக செய்வதை விட்டும்) அவர்களை திசை திருப்பி விடாது. அவர்கள் ஒரு நாளை பயப்படுவார்கள். அதில் (-அந்நாளில்) உள்ளங்களும் பார்வைகளும் தடுமாறும்.
Tamil Translation - Abdulhamid Baqawi37. பல ஆண்கள் இருக்கின்றனர். அவர்களுடைய வர்த்தகமும் கொடுக்கல் வாங்கலும் அவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பெயரை நினைவு செய்வதில் இருந்தும், தொழுகையை உறுதியாக கடைபிடிப்பதிலிருந்தும், ஜகாத்துக் கொடுப்பதிலிருந்தும் அவர்களைத் திருப்பிவிடாது. உள்ளங்களும் பார்வைகளும் (பயத்தால் திடுக்கிட்டுத்) தடுமாறிவிடக்கூடிய நாளைப் பற்றி அவர்கள் (எந்நேரமும்) பயந்து கொண்டிருப்பார்கள்.