بَلْ أَتَيْنَٰهُم بِٱلْحَقِّ وَإِنَّهُمْ لَكَٰذِبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(வானவர்கள் அல்லாஹ்வின் பிள்ளைகள், சிலைகளும் கடவுள்கள்தான் என்று இவர்கள் எண்ணுவது போல் அல்ல உண்மை) மாறாக, நாம் அவர்களுக்கு உண்மையைக் கொண்டு வந்துள்ளோம். (-விவரித்துள்ளோம்.) நிச்சயமாக இவர்கள் பொய்யர்கள்தான்.
Tamil Translation - Omar Sharif(வானவர்கள் அல்லாஹ்வின் பெண் பிள்ளைகள், சிலைகளை வணங்குவது இறைவனை வணங்குவதுதான் என்று இவர்கள் எண்ணுவது போல் அல்ல உண்மை.) மாறாக, நாம் அவர்களுக்கு விரிவாக உண்மையைக் கூறிவிட்டோம். இன்னும் நிச்சயமாக இவர்கள் பொய்யர்கள்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi90. நாம் அவர்களுக்கு சத்தியத்தையே கொடுத்திருந்தோம். (இதை மறுத்துக் கூறும்) அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே!