caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Muminoon அத்தியாயம், வசனம் 91

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 74 · 23:91

مَا ٱتَّخَذَ ٱللَّهُ مِن وَلَدٍ وَمَا كَانَ مَعَهُۥ مِنْ إِلَٰهٍ إِذًا لَّذَهَبَ كُلُّ إِلَٰهٍۭ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ سُبْحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் (தனக்கு) எந்த ஒரு குழந்தையையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. (படைப்புகளை படைத்தபோது) அவனுடன் எந்தக் கடவுளும் இருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளும் தான் படைத்ததை (தனியாக) கொண்டு சென்று விடுவார்கள். இன்னும் சிலர், சிலர் மீது ஆதிக்கம் செலுத்தி (வென்று) இருப்பார்கள். அவர்கள் வர்ணிக்கின்றவற்றை விட்டு அல்லாஹ் மகா பரிசுத்தமானவன். (அவனுக்கு குழந்தையும் இல்லை, பங்காளியும் இல்லை, வேறு கடவுளும் இல்லை.)
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் (தனக்கு) குழந்தையை எடுத்துக் கொள்ளவில்லை. இன்னும், (படைப்புகளை அவன் முதலாவதாக படைத்தபோது) அவனுடன் வேறு கடவுள்கள் யாரும் இருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளும், தான் படைத்ததை (தனியாக) கொண்டு சென்று விடுவார்கள். இன்னும் (தங்களுக்குள் சண்டையிட்டு) சிலர், சிலரை வென்று இருப்பார்கள். (இறைவனைப் பற்றி) அவர்கள் எதை வர்ணிக்கிறார்களோ அதை விட்டு அல்லாஹ் மகா பரிசுத்தமானவன் ஆவான். (ஆக, அவனுக்கு குழந்தையும் இல்லை, பங்காளியும் இல்லை, அவனுடன் வேறு கடவுளும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் இல்லை.)
Tamil Translation - Abdulhamid Baqawi91. அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொள்ளவில்லை. அவனுடன் வணக்கத்திற்குரிய வேறு இறைவனுமில்லை. அவ்வாறாயின் ஒவ்வொரு இறைவனும் தான் படைத்தவற்றைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, ஒருவர் மற்றவர் மீது போர் புரிய ஆரம்பித்து விடுவர். (நிராகரிக்கும்) இவர்கள் வர்ணிக்கும் இத்தகைய வர்ணிப்புகளை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70