caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Muminoon அத்தியாயம், வசனம் 62

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 74 · 23:62

وَلَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا وَلَدَيْنَا كِتَٰبٌ يَنطِقُ بِٱلْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎந்த ஓர் ஆன்மாவுக்கும் அதன் வசதிக்கு உட்பட்டே தவிர நாம் சிரமம் தருவதில்லை. நம்மிடம் (படைப்பினங்களுடைய செயல்கள் எழுதப்பட்ட) சத்தியத்தைக் கொண்டு பேசுகின்ற ஒரு புத்தகம் இருக்கின்றது. அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஎந்த ஓர் ஆன்மாவுக்கும் அதன் சக்திக்கு உட்பட்டே தவிர நாம் சிரமம் தருவதில்லை. நம்மிடம் (படைப்புகளுடைய செயல்கள் எழுதப்பட்ட,) சத்தியத்தை பேசுகிற ஒரு புத்தகம் இருக்கிறது. (கூடுதல் குறைவின்றி அடியார்களின் செயலை அது அறிவிக்கும்.) இன்னும், அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi62. எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாக (எதையும் செய்யும்படி) நாம் நிர்ப்பந்திப்பதில்லை. (ஒவ்வொருவரின்) உண்மையை உரைக்கும் தினசரிக் குறிப்பும் நம்மிடம் இருக்கிறது. (அவர்களின் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70