caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hajj அத்தியாயம், வசனம் 47

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 103 · 22:47

وَيَسْتَعْجِلُونَكَ بِٱلْعَذَابِ وَلَن يُخْلِفَ ٱللَّهُ وَعْدَهُۥ وَإِنَّ يَوْمًا عِندَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அவர்கள் உம்மிடம் வேதனையை அவசரமாகத் தேடுகின்றனர். அல்லாஹ் தனது வாக்கை அறவே மாற்ற மாட்டான். நிச்சயமாக உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் எண்ணக்கூடியவற்றிலிருந்து (உங்கள் நாட்களிலிருந்து) ஆயிரம் ஆண்டுகளைப் போன்றதாகும்.
Tamil Translation - Omar Sharif(நபியே! எச்சரிக்கப்பட்ட) தண்டனையை அவசரமாக வர வேண்டுமென உம்மிடம் கோருகிறார்கள். அல்லாஹ் தனது வாக்கை அறவே மாற்ற மாட்டான். நிச்சயமாக உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் எண்ணக் கூடியவற்றிலிருந்து (உங்கள் நாட்களின் கணக்குப்படி) ஆயிரம் ஆண்டுகளைப் போன்றாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi47. (நபியே!) அவர்கள் வேதனையைத் தேடி உம்மிடம் அவசரப்படுகின்றனர். (நீர் கூறுவீராக: உங்கள் மீது வேதனையை இறக்குவதாக) அல்லாஹ் செய்த வாக்குறுதியை அவன் மாற்றமாட்டான். நிச்சயமாக உமது இறைவனிடத்தில் ஒரு நாள் நீங்கள் எண்ணும் (உங்கள்) ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70