أَفَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَتَكُونَ لَهُمْ قُلُوبٌ يَعْقِلُونَ بِهَآ أَوْ ءَاذَانٌ يَسْمَعُونَ بِهَا فَإِنَّهَا لَا تَعْمَى ٱلْأَبْصَٰرُ وَلَٰكِن تَعْمَى ٱلْقُلُوبُ ٱلَّتِى فِى ٱلصُّدُورِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் பூமியில் பயணம் செய்ய வேண்டாமா? (அழிக்கப்பட்டவர்களின் ஊர்களை அவர்கள் சென்று பார்க்க வேண்டாமா? அப்படி அவர்கள் செய்தால்) அவர்களுக்கு அவற்றின் மூலம் அவர்கள் சிந்தித்துப் புரிகின்ற உள்ளங்களும் அவற்றின் மூலம் செவிமடுக்கின்ற காதுகளும் அவர்களுக்கு உண்டாகும். ஏனெனில் நிச்சயமாக (கண்) பார்வைகள் குருடாகுவதில்லை. எனினும் நெஞ்சங்களில் உள்ள உள்ளங்கள்தான் குருடாகி விடுகின்றன.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் (அழிக்கப்பட்டவர்கள்) பூமியில் பயணம் செய்து பார்க்க மாட்டார்களா? (அப்படி அவர்கள் செய்தால்) அவர்களுக்கு உள்ளங்கள் இருந்தால் அவற்றின் மூலம் சிந்தித்து புரிவார்கள். இன்னும், அவர்களுக்கு (நல்லுபதேசத்தை செவியுறும்) காதுகள் இருந்தால் அவர்கள் அவற்றின் மூலம் செவியுறுவார்கள். ஆக, நிச்சயமாக (கண்களின்) பார்வைகள் குருடாகுவதில்லை. எனினும், நெஞ்சங்களில் உள்ள உள்ளங்கள்தான் குருடாகி விடுகின்றன.
Tamil Translation - Abdulhamid Baqawi46. ஆகவே, இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இவற்றைப்) பார்க்க வேண்டாமா? (அவ்வாறு பார்ப்பார்களாயின்) உணர்ந்து கொள்ளக்கூடிய உள்ளங்கள் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும் அல்லது (நல்லுபதேசத்தைக்) கேட்கக்கூடிய செவிகள் அவர்களுக்கு உண்டாகிவிடும். நிச்சயமாக அவர்களுடைய (புறக்) கண்கள் குருடாகிவிடவில்லை. எனினும், நெஞ்சுகளில் இருக்கும் (அவர்களுடைய அகக் கண்களான) உள்ளங்கள் தான் குருடாகிவிட்டன.