caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hajj அத்தியாயம், வசனம் 26

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 103 · 22:26

وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَٰهِيمَ مَكَانَ ٱلْبَيْتِ أَن لَّا تُشْرِكْ بِى شَيْـًٔا وَطَهِّرْ بَيْتِىَ لِلطَّآئِفِينَ وَٱلْقَآئِمِينَ وَٱلرُّكَّعِ ٱلسُّجُودِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇப்ராஹீமுக்கு (எனது) வீட்டுடைய இடத்தை (கஅபா இருந்த இடத்தை) நாம் உறுதிப்படுத்திய சமயத்தை நினைவு கூர்வீராக! (இப்ராஹீமே!) நீர் எனக்கு எதையும் இணைவைக்காதீர்! மேலும், எனது வீட்டை (அதை) தவாஃப் செய்பவர்களுக்காகவும் நின்று தொழுபவர்களுக்காகவும், குனிந்து தொழுபவர்களுக்காகவும், சிரம் பணிந்து தொழுபவர்களுக்காகவும் சுத்தமாக வைத்திருப்பீராக!
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நபியே!) இப்ராஹீமுக்கு (கஅபாவாகிய எனது) ஆலயத்தின் இடத்தை நாம் (காண்பித்து கொடுத்து அதில் ஆலயத்தை புதிதாக கட்டி எழுப்ப) அமைத்து கொடுத்த சமயத்தை நினைவு கூர்வீராக! (இப்ராஹீமே!) நீர் எனக்கு எதையும் இணைவைத்து வணங்காதீர்! மேலும், எனது வீட்டை (அதை) தவாஃப் செய்பவர்களுக்காகவும் தொழுகையில் நிற்பவர்களுக்காகவும், குனிபவர்களுக்காகவும், சிரம் பணிபவர்களுக்காகவும் (சிலைகளை விட்டும்) சுத்தமாக வைத்திருப்பீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi26. (நபியே!) இப்றாஹீமை நம் வீட்டின் சமீபமாக வசிக்கும்படிச் செய்து (அவரை நோக்கி) “நீர் எனக்கு எவரையும் இணையாக்காதீர். என் (இந்த) வீட்டை (தவாஃப்) சுற்றி வருபவர்களுக்கும், அதில் நின்று, குனிந்து, சிரம் பணிந்து தொழுபவர்களுக்கும் அதைப் பரிசுத்தமாக்கி வைப்பீராக'' என்று நாம் கூறிய சமயத்தில்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70