إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ ٱلَّذِى جَعَلْنَٰهُ لِلنَّاسِ سَوَآءً ٱلْعَٰكِفُ فِيهِ وَٱلْبَادِ وَمَن يُرِدْ فِيهِ بِإِلْحَادٍۭ بِظُلْمٍ نُّذِقْهُ مِنْ عَذَابٍ أَلِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நிராகரித்தவர்கள் இன்னும் அல்லாஹ்வின் பாதையிலிருந்தும் (-மார்க்கத்திலிருந்தும்) அல்மஸ்ஜிதுல் ஹராமிலிருந்தும் (முஃமின்களை) தடுப்பவர்கள்... (இவர்களுக்குக் கடுமையான வேதனையை சுவைக்க வைப்போம்.) அது (-அல்மஸ்ஜிதுல் ஹராம்) அதில் தங்கி இருப்பவருக்கும் வெளியிலிருந்து வருபவருக்கும் பொதுவானது. எவர் அதில் (-அந்த மஸ்ஜிதில்) அநியாயமாக வரம்பு மீறுவதை (-தவறு செய்வதை) நாடுவாரோ வலி தருகின்ற வேதனையை அவருக்கு நாம் சுவைக்க வைப்போம்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ; இன்னும், அல்லாஹ்வின் பாதையிலிருந்தும் (-அவனது மார்க்கத்திலிருந்தும்) அல்மஸ்ஜிதுல் ஹராம் புனித பள்ளிவாசலிலிருந்தும் (முஃமின்களை) தடுக்கிறார்களோ (அவர்களுக்குக் கடுமையான தண்டனையை சுவைக்க வைப்போம்). அது, (-அல்மஸ்ஜிதுல் ஹராம்) அதில் தங்கி இருப்பவருக்கும் வெளியிலிருந்து வருபவருக்கும் பொதுவான (மஸ்ஜி)தாகும். எவர் அ(ந்த மஸ்ஜி)தில் அநியாயமாக பாவம் செய்ய நாடுவாரோ, துன்புறுத்துகின்ற தண்டனையை நாம் அவருக்கு சுவைக்க செய்வோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi25. நிச்சயமாக எவர்கள் நிராகரித்து (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு தடுத்துக்கொண்டு (மக்காவாகிய) அங்கு வசித்திருப்பவர்கள் ஆயினும், வெளியிலிருந்து வருபவர்கள் ஆயினும், மனிதர்கள் அனைவருக்குமே சமமான உரிமையுள்ளதாக நாம் ஏற்படுத்திய சிறப்புற்ற மஸ்ஜிதை விட்டும் தடை செய்து கொண்டு இருக்கிறார்களோ, (அவர்கள் நேர்வழி பெறமாட்டார்கள்.) எவராவது அதில் மார்க்கத்திற்கு விரோதமாக அநியாயம் செய்ய விரும்பினால், அவர்களை, துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்க வைப்போம்.