caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anbiyaa அத்தியாயம், வசனம் 82

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 73 · 21:82

وَمِنَ ٱلشَّيَٰطِينِ مَن يَغُوصُونَ لَهُۥ وَيَعْمَلُونَ عَمَلًا دُونَ ذَٰلِكَ وَكُنَّا لَهُمْ حَٰفِظِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஷைத்தான்களில் (கடலில்) அவருக்காக மூழ்கின்றவர்களையும் அது அல்லாத வேறு செயலை செய்கின்றவர்களையும் (நாம் அவருக்கு வசப்படுத்தினோம்). அவர்களை பாதுகா(த்து கண்காணி)ப்பவர்களாக நாம் இருந்தோம்.
Tamil Translation - Omar Sharif(கடலில்) அவருக்காக மூழ்கி (முத்து பவளங்களை எடுத்து) வருபவர்களையும் அது அல்லாத வேறு செயலை செய்பவர்களையும் ஷைத்தான்களில் இருந்து நாம் அவருக்கு அடிபணிய வைத்தோம். இன்னும், அவர்களை கண்காணிப்பவர்களாக நாம் இருந்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi82. கடலில் மூழ்கி (முத்து, பவளம் போன்றவற்றைக் கொண்டு) வரக்கூடிய (மூர்க்க) ஷைத்தான்களையும் நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். இதைத் தவிர (அவருக்கு அவசியமான) பல வேலைகளையும் அவை செய்துகொண்டு இருந்தன. நாம்தான் அவர்களைக் கண்காணித்து வந்தோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70