وَأَيُّوبَ إِذْ نَادَىٰ رَبَّهُۥٓ أَنِّى مَسَّنِىَ ٱلضُّرُّ وَأَنتَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅய்யூபை நினைவு கூர்வீராக! அவர் தன் இறைவனை அழைத்தபோது, “நிச்சயமாக நான் என்னை தீங்குகள் தொட்டுவிட்டன. நீயோ கருணையாளர்களில் மகா கருணையாளன்” (என்று கூறினார்).
Tamil Translation - Omar Sharifஇன்னும், அய்யூபை நினைவு கூர்வீராக! அவர் தன் இறைவனை அழைத்தபோது, “நிச்சயமாக நான் (உனது அடிமை,) எனக்கு நோய் ஏற்பட்டது. நீயோ கருணையாளர்களில் மகா கருணையாளன்! (ஆகவே, எனக்கு சுகமளிப்பாயாக!”)
Tamil Translation - Abdulhamid Baqawi83. ஐயூபையும் (நாம் நம் தூதராக அனுப்பிவைத்தோம்). அவர் தன் இறைவனை நோக்கி ‘‘நிச்சயமாக நோய் என்னைப் பிடித்துக் கொண்டது. (அதை நீ நீக்கி விடு.) நீயோ கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்'' என்று பிரார்த்தனை செய்தார்.