وَدَاوُۥدَ وَسُلَيْمَٰنَ إِذْ يَحْكُمَانِ فِى ٱلْحَرْثِ إِذْ نَفَشَتْ فِيهِ غَنَمُ ٱلْقَوْمِ وَكُنَّا لِحُكْمِهِمْ شَٰهِدِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதாவூது இன்னும் ஸுலைமானை நினைவு கூர்வீராக! அவ்விருவரும் விவசாயத்தின் விளைச்சலில் தீர்ப்பளித்த சமயத்தை நினைவு கூர்வீராக! அதில் மக்களுடைய ஆடுகள் (இரவில்) நுழைந்த போது அவர்களின் (தாவூது, ஸுலைமான் மற்றும் அந்தக் கூட்டத்தார்களின்) தீர்ப்பை நாம் அறிந்தவர்களாக இருந்தோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், தாவூதையும் சுலைமானையும் நினைவு கூர்வீராக! அவ்விருவரும் விவசாயத்தின் விளைச்சலில் தீர்ப்பளித்த சமயத்தை நினைவு கூர்வீராக! அதில் (அந்த விளைச்சலில் வேறு) மக்களுடைய ஆடுகள் (இரவில்) நுழைந்த போது (அவை விளைச்சலை மேய்ந்து நாசப்படுத்தி விட்டன). (தாவூது, சுலைமான் மற்றும் அந்தக் கூட்டத்தார் ஆகிய) அவர்களின் தீர்ப்பை நாம் அறிந்தவர்களாக இருந்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi78. தாவூதையும் ஸுலைமானையும் (நபியாக அனுப்பிவைத்தோம்). ஒருவருடைய ஆடுகள் மற்றொருவரின் பயிரை மேய்ந்து விட்டது பற்றி (தாவூத், சுலைமான் ஆகிய) இருவரும் தீர்ப்புக் கூற இருந்த சமயத்தில் அவர்களுடைய தீர்ப்பை நாம் (கவனித்துப்) பார்த்துக் கொண்டிருந்தோம்.