مَآ ءَامَنَتْ قَبْلَهُم مِّن قَرْيَةٍ أَهْلَكْنَٰهَآ أَفَهُمْ يُؤْمِنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்களுக்கு முன்னர், (அத்தாட்சியைக் கேட்ட) எந்த சமுதாயமும் (அத்தாட்சி வந்த பின்னர்) நம்பிக்கை கொள்ளவில்லை. ஆகவே, அவர்களை அழித்தோம். எனவே, (மக்காவாசிகளாகிய) இவர்கள் (மட்டும்) நம்பிக்கை கொண்டு விடுவார்களா?
Tamil Translation - Omar Sharifஇவர்களுக்கு முன்னர், (அத்தாட்சியைக் கேட்ட) எந்த சமுதாயமும் (அந்த அத்தாட்சி வந்த பின்னர்) நம்பிக்கை கொள்ளவில்லை. ஆகவே, அவர்களை (எல்லாம்) நாம் அழித்தோம். எனவே, (மக்காவாசிகளாகிய) இவர்கள் (மட்டும்) (நமது அத்தாட்சிகள் அவர்களிடம் வந்தால் அவற்றை அவர்கள்) நம்பிக்கை கொள்வார்களா?
Tamil Translation - Abdulhamid Baqawi6. இவர்களுக்கு முன்னர் நாம் அழித்துவிட்ட ஊராரில் ஒருவருமே (அவர்கள் விரும்பிய அத்தாட்சிகளைக் கண்ட பின்னர்) நம்பிக்கை கொள்ளவில்லை. (அவ்வாறிருக்க) இவர்களா நம்பிக்கை கொள்ளப் போகின்றனர்!