بَلْ قَالُوٓا۟ أَضْغَٰثُ أَحْلَٰمٍۭ بَلِ ٱفْتَرَىٰهُ بَلْ هُوَ شَاعِرٌ فَلْيَأْتِنَا بِـَٔايَةٍ كَمَآ أُرْسِلَ ٱلْأَوَّلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமாறாக, (அவர்களில் சிலர்) கூறினர்: “(இது) பயமுறுத்துகின்ற கனவுகள்.” மாறாக, (மற்றும் சிலர் கூறினர்:) “இவர் (-முஹம்மது இறைவன் மீது) இதை இட்டுக்கட்டுகிறார்.” மாறாக, (வேறு சிலர் கூறினர்): “இவர் ஒரு கவிஞர். ஆகவே, முந்தியவர்கள் அனுப்பப்பட்டது போன்று அவரும் எங்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வரட்டும்.”
Tamil Translation - Omar Sharifமாறாக, (அவர்களில் சிலர்) கூறினார்கள்: “(இது) பயமுறுத்துகின்ற கனவுகள்.” (மற்றும் சிலர் கூறினார்கள்:) “மாறாக, (முஹம்மத் இறைவன் மீது) இதை பொய்யாக இட்டுக்கட்டுகிறார்.” (வேறு சிலர் கூறினார்கள்): “மாறாக, இவர் ஒரு கவிஞர்.” “ஆகவே, முதலாமவர்கள் (முந்திய தூதர்கள்) அனுப்பப்பட்டது போன்று அவரும் எங்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வரட்டும்.” (என்று அவர்கள் கூறுகிறார்கள்).
Tamil Translation - Abdulhamid Baqawi5. (தவிர, அவர்கள் நம் வசனங்களைப் பற்றி) மாறாக, ‘‘இவை சிதறிய சிந்தனை(யால் ஏற்பட்ட வாக்கியங்)கள் என்றும், நம் தூதர் இதைப் பொய்யாகத் தாமே கற்பனை செய்துகொண்டார் என்றும், இவர் ஒரு கவிஞர்தான்; (தன் கவிதை ஆற்றலால் அமைத்த வாக்கியங்களே இவை) என்றும் (கூறுவதுடன்) முற்காலத்தில் அனுப்பப்பட்ட தூதர்கள் (கொண்டு வந்ததைப்) போல இவரும் (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்'' என்றும் கூறுகின்றனர்!