caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anbiyaa அத்தியாயம், வசனம் 47

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 73 · 21:47

وَنَضَعُ ٱلْمَوَٰزِينَ ٱلْقِسْطَ لِيَوْمِ ٱلْقِيَٰمَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْـًٔا وَإِن كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَىٰ بِنَا حَٰسِبِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமறுமை நாளில் நீதமான தராசுகளை நாம் வைப்போம். ஆகவே, எந்த ஓர் ஆன்மாவுக்கும் அறவே அநீதி இழைக்கப்படாது. (அது செய்த செயல்) கடுகின் விதை அளவு இருந்தாலும் அதை(யும்) நாம் கொண்டு வருவோம். விசாரிப்பவர்களாக நாமே போதுமானவர்கள்.
Tamil Translation - Omar Sharifமறுமை நாளில் நீதமான தராசுகளை நாம் வைப்போம். ஆகவே, எந்த ஓர் ஆன்மாவுக்கும் அறவே அநீதி இழைக்கப்படாது. (அது செய்த செயல்) கடுகின் விதை அளவு இருந்தாலும் அதை(யும் விசாரணைக்கு) நாம் கொண்டு வருவோம். இன்னும், (அவர்களை) விசாரிப்பதற்கு நாமே போதுமானவர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi47. மறுமை நாளில் சரியான தராசையே நாம் நிறுத்துவோம். எந்த ஓர் ஆத்மாவுக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப்பட மாட்டாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும். (வேறெவரின் உதவியும் நமக்குத் தேவையில்லை.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70