caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anbiyaa அத்தியாயம், வசனம் 44

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 73 · 21:44

بَلْ مَتَّعْنَا هَٰٓؤُلَآءِ وَءَابَآءَهُمْ حَتَّىٰ طَالَ عَلَيْهِمُ ٱلْعُمُرُ أَفَلَا يَرَوْنَ أَنَّا نَأْتِى ٱلْأَرْضَ نَنقُصُهَا مِنْ أَطْرَافِهَآ أَفَهُمُ ٱلْغَٰلِبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமாறாக, இவர்களுக்கும் இவர்களின் மூதாதைகளுக்கும் (இவ்வுலக வாழ்க்கையில்) சுகமளித்தோம். இறுதியாக இவர்களுக்கு வாழ்க்கை நீண்டது. நிச்சயமாக நாம் பூமியை அதன் சுற்றுப்புறங்களிலிருந்து அழித்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? ஆகவே, இவர்கள் (மட்டும் நமது இத்தூதரை) மிகைத்துவிடுவார்களா?
Tamil Translation - Omar Sharifமாறாக, இவர்களுக்கும் இவர்களின் மூதாதைகளுக்கும் (இவ்வுலக வாழ்க்கையில்) சுகமான வாழ்வளித்தோம். இறுதியாக இவர்களுக்கு வாழ்க்கை நீண்டு சென்றது. (நீண்ட காலம் சுகமாக வாழ்வோம் என்று நினைத்தனர்.) நிச்சயமாக நாம் பூமியை அதன் சுற்றுப்புறங்களிலிருந்து அழித்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? ஆகவே, இவர்கள் (இந்த மக்காவாசிகள் மட்டும் நமது தூதரை) மிகைத்து விடுவார்களா?
Tamil Translation - Abdulhamid Baqawi44. இவர்களையும் இவர்களுடைய மூதாதைகளையும் (நீண்ட காலம் வரை) சுகமனுபவிக்கச் செய்தோம். அதனால் அவர்களின் ஆயுளும் அதிகரித்தது. (ஆகவே, அவர்கள் கர்வங்கொண்டு விட்டார்களா?) நிச்சயமாக நாம் இவர்களைச் சூழ்ந்துள்ள பூமியை(ப் படிப்படியாக)க் குறைத்து (இவர்களை நெருக்கி)க் கொண்டே வருவதை இவர்கள் காணவில்லையா? இவர்களா (நம்மை) வென்று விடுவார்கள்?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70