caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anbiyaa அத்தியாயம், வசனம் 43

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 73 · 21:43

أَمْ لَهُمْ ءَالِهَةٌ تَمْنَعُهُم مِّن دُونِنَا لَا يَسْتَطِيعُونَ نَصْرَ أَنفُسِهِمْ وَلَا هُم مِّنَّا يُصْحَبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களை (நம்மிடமிருந்து) பாதுகாக்கின்ற கடவுள்கள் நம்மை அன்றி அவர்களுக்கு உண்டா? அவர்கள் (-அந்த கடவுள்கள்) தங்களுக்கு உதவுவதற்கே இயலமாட்டார்கள். இன்னும் அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) நம்மிடமிருந்து பாதுகாக்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஅல்லது, அவர்களை (நமது தண்டனையிலிருந்து) பாதுகாக்கிற கடவுள்கள் நம்மை அன்றி அவர்களுக்கு உண்டா? (இவர்கள் கடவுள்கள் என்று வணங்கும்) அவர்கள் தங்களுக்கு உதவுவதற்கே இயலமாட்டார்கள். இன்னும் இ(ந்த நிராகரிப்ப)வர்கள் நம்மிடமிருந்து (யார் மூலமாகவும்) பாதுகாக்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi43. இவர்களை (நம் வேதனையிலிருந்து) தடுக்கக்கூடிய தெய்வங்கள் நம்மைத் தவிர இவர்களுக்கு வேறு இருக்கின்றனவா? (இவர்கள் தெய்வங்கள் எனக் கூறும்) அவை (இவர்களுக்கு உதவி செய்வதென்ன!) தமக்குத்தாமே உதவி செய்துகொள்ளவும் சக்தியற்றவை. ஆகவே, நமக்கெதிராக அவை இவர்களுக்குத் துணை புரியாது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70