قُلْ إِنَّمَآ أُنذِرُكُم بِٱلْوَحْىِ وَلَا يَسْمَعُ ٱلصُّمُّ ٱلدُّعَآءَ إِذَا مَا يُنذَرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக: நான் உங்களை எச்சரிப்பதெல்லாம் வஹ்யின் மூலமாகத்தான். செவிடர்கள் எச்சரிக்கப்படும்போது (நேர்வழியின் சத்திய) அழைப்புக்கு செவிசாய்க்க மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: நான் உங்களை எச்சரிப்பதெல்லாம் வஹ்யின் மூலமாகத்தான். இன்னும், செவிடர்களோ அவர்கள் எச்சரிக்கப்படும்போது (நேர்வழியின்) அழைப்புக்கு செவிசாய்க்க மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi45. (நபியே! அவர்களை நோக்கி ‘‘வேதனையைக் கொண்டு) நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹ்யின் மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டவற்றையே! (நான் சுயமாக எதையும் கூறவில்லை)'' என்று கூறுவீராக. (எனினும், இவர்கள் செவிடர்களைப் போல் இருக்கின்றனர். ஆகவே) இந்த செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டால் அதை அவர்கள் செவியேற்க மாட்டார்கள்.