caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anbiyaa அத்தியாயம், வசனம் 24

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 73 · 21:24

أَمِ ٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ ءَالِهَةً قُلْ هَاتُوا۟ بُرْهَٰنَكُمْ هَٰذَا ذِكْرُ مَن مَّعِىَ وَذِكْرُ مَن قَبْلِى بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ ٱلْحَقَّ فَهُم مُّعْرِضُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனை அன்றி (வேறு) கடவுள்களை அவர்கள் எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக: உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள். இது என்னுடன் உள்ளவர்களைப் பற்றிய பேச்சாகும்; இன்னும் எனக்கு முன் உள்ளவர்களைப் பற்றிய பேச்சாகும். அவர்களில் (-இணைவைப்பவர்களில்) அதிகமானவர்கள் சத்தியத்தை அறியமாட்டார்கள். ஆகவே, அவர்கள் புறக்கணிக்கிறார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவ(ன் ஒருவ)னை அன்றி பல கடவுள்களை அவர்கள் எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக: “உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள். இது என்னுடன் உள்ளவர்களைப் பற்றிய செய்தியாகும்; இன்னும், எனக்கு முன் உள்ளவர்களைப் பற்றிய செய்தியாகும். மாறாக, அவர்களில் அதிகமானவர்கள் சத்தியத்தை அறியமாட்டார்கள். ஆகவே, அவர்கள் (சத்தியத்தை) புறக்கணிப்பவர்கள் ஆவார்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi24. (நபியே!) இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றைக் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் அவர்களை நோக்கி) ''என்னுடன் இருப்பவர்களின் வேதமும், எனக்கு முன்னுள்ளவர்களின் வேதமும் இதோ இருக்கின்றன. (இவற்றிலிருந்து இதற்கு) உங்கள் ஆதாரத்தை நீங்கள் கொண்டு வாருங்கள்'' என்று கூறுவீராக. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையை அறிந்து கொள்ள சக்தி அற்றவர்கள். ஆதலால் அவர்கள் (இவ்வேதத்தையும்) புறக்கணிக்கின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70