يَوْمَ نَطْوِى ٱلسَّمَآءَ كَطَىِّ ٱلسِّجِلِّ لِلْكُتُبِ كَمَا بَدَأْنَآ أَوَّلَ خَلْقٍ نُّعِيدُهُۥ وَعْدًا عَلَيْنَآ إِنَّا كُنَّا فَٰعِلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஏடுகளை புத்தகங்களின் மீது சுருட்டுவதைப் போன்று வானத்தை நாம் சுருட்டுகின்ற நாளில்... (திடுக்கம் அவர்களை கவலைக்குள்ளாக்காது.) படைப்பின் முதலாவதை நாம் தொடங்கியது போன்றே அதை மீண்டும் (பழைய நிலைக்கே -இல்லாமைக்கே) திருப்பி விடுவோம். (அனைத்தையும் அழித்து விடுவோம்.) இது நம்மீது கடமையான வாக்காகும். நிச்சயமாக நாம் (இதை) செய்(து முடிப்)பவர்களாகவே இருக்கிறோம்.
Tamil Translation - Omar Sharifநூல்களுக்காக ஏடுகள் மடிக்கப்படுவது போன்று வானத்தை நாம் மடிக்கின்ற நாளில் (மறுமையின் திடுக்கம் அவர்களை கவலைக்குள்ளாக்காது). படைப்புகளை முதல் முறையாக நாம் படைத்தது போன்றே அவர்களை மீண்டும் உருவாக்குவோம். இது நம்மீது கடமையான வாக்காகும். நிச்சயமாக நாம் (இதை) செய்(து முடிப்)பவர்களாகவே இருக்கிறோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi104. எழுதப்பட்ட கடிதத்தைச் சுருட்டுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் நாளை (நபியே!) நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக. முதல் தடவை நாம் அவர்களை படைத்தது போன்றே (அந்நாளில்) நாம் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) அவர்களை மீளவைப்போம். இது நம்மீது கடமையானதொரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதைச் செய்தே தீருவோம்.