لَا يَحْزُنُهُمُ ٱلْفَزَعُ ٱلْأَكْبَرُ وَتَتَلَقَّىٰهُمُ ٱلْمَلَٰٓئِكَةُ هَٰذَا يَوْمُكُمُ ٱلَّذِى كُنتُمْ تُوعَدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமிகப்பெரிய திடுக்கம் அவர்களை கவலைக்குள்ளாக்காது. வானவர்கள் அவர்களை வரவேற்பார்கள். “நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த உங்கள் நாள் இதுதான்” (என்று வாழ்த்துவார்கள்).
Tamil Translation - Omar Sharifமிகப்பெரிய திடுக்கம் அவர்களை கவலைக்குள்ளாக்காது. இன்னும், “நீங்கள் (சொர்க்கம் செல்வீர்கள் என்று) வாக்களிக்கப்பட்டு கொண்டிருந்த உங்கள் (மகிழ்ச்சியான) நாள் இதுதான்” (என்று கூறி) வானவர்கள் அவர்களை வரவேற்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi103. (மறுமையில் ஏற்படும்) பெரும் திடுக்கமும் அவர்களை துக்கத்திற்குள்ளாக்காது. (அச்சமயம்) வானவர்கள் அவர்களை எதிர்கொண்டழைப்பார்கள் ‘‘உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட (நல்ல) நாள் இதுதான்'' (என்று நற்செய்தியும் கூறுவார்கள்).