caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anbiyaa அத்தியாயம், வசனம் 105

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 73 · 21:105

وَلَقَدْ كَتَبْنَا فِى ٱلزَّبُورِ مِنۢ بَعْدِ ٱلذِّكْرِ أَنَّ ٱلْأَرْضَ يَرِثُهَا عِبَادِىَ ٱلصَّٰلِحُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“லவ்ஹுல் மஹ்ஃபூழ்” (-விதியின் தாய் நூலில்) எழுதப்பட்டதற்குப் பின்னர். (இறைத்தூதர்கள் மீது இறக்கப்பட்ட) வேதங்களில் திட்டவட்டமாக நாம் எழுதினோம். (விதித்தோம்). நிச்சயமாக (சொர்க்கத்தின்) பூமி -அதை எனது நல்லடியார்கள் அனந்தரமாக அடைவார்கள்.
Tamil Translation - Omar Sharif“லவ்ஹுல் மஹ்ஃபூள்” (-விதியின் தாய் நூலில்) எழுதப்பட்டதற்குப் பின்னர். (இறைத்தூதர்கள் மீது இறக்கப்பட்ட) வேதங்களில் திட்டவட்டமாக நாம் எழுதினோம்: “நிச்சயமாக (சொர்க்க) பூமியானது, - அதை எனது நல்லடியார்கள்தான் சொந்தமாக்குவார்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi105. நிச்சயமாக நாம் ‘ஜபூர்' என்னும் வேதத்தில், நல்லுபதேசங்களுக்குப் பின்னர் எழுதியிருக்கிறோம், ‘‘நிச்சயமாக பூமிக்கு என் அடியார்களில் நன்நடத்தை உடையவர்கள்தான் வாரிசாவார்கள்'' என்று.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70