فَتَوَلَّىٰ فِرْعَوْنُ فَجَمَعَ كَيْدَهُۥ ثُمَّ أَتَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஃபிர்அவ்ன் திரும்பிச் சென்றான். தனது சூழ்ச்சியை ஒன்றிணைத்தான். பிறகு (வாக்களிக்கப்பட்ட நேரத்தில் சூனியக்காரர்களுடன்) வந்தான்.
Tamil Translation - Omar Sharifஆக, ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்றான். இன்னும், (மூஸாவை தோற்கடிக்க) தனது தந்திர யுக்திகளை ஒன்றிணைத்தான். பிறகு (குறிக்கப்பட்ட நேரத்தில் அந்த இடத்திற்கு சூனியக்காரர்களுடன்) வந்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi60. பின்னர், ஃபிர்அவ்ன் அவரைவிட்டு விலகி (தன் இருப்பிடம் சென்று சூனியத்திற்குரிய) தனது எல்லா சூழ்ச்சிகளையும் சேகரித்துக் கொண்டு பின்பு, (குறித்த நாளில், குறித்த இடத்திற்கு) வந்தான்.