إِذْ رَءَا نَارًا فَقَالَ لِأَهْلِهِ ٱمْكُثُوٓا۟ إِنِّىٓ ءَانَسْتُ نَارًا لَّعَلِّىٓ ءَاتِيكُم مِّنْهَا بِقَبَسٍ أَوْ أَجِدُ عَلَى ٱلنَّارِ هُدًى
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் ஒரு நெருப்பைப் பார்த்தபோது, அவர் தனது குடும்பத்தினருக்குக் கூறினார்: (இங்கே) தங்கி இருங்கள்! நிச்சயமாக நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். அதிலிருந்து ஒரு எரிகொள்ளியை உங்களிடம் கொண்டு வரலாம் அல்லது நெருப்பின் அருகில் ஒரு வழிகாட்டுதலை நான் பெறலாம்.
Tamil Translation - Omar Sharifஅவர் ஒரு நெருப்பைப் பார்த்தபோது (நிகழ்ந்த சம்பவத்தின் செய்தி உமக்கு வந்ததா?). ஆக, அவர் தனது குடும்பத்தினருக்குக் கூறினார்: “(இங்கே) தங்கி இருங்கள்! நிச்சயமாக நான் ஒரு நெருப்பைக் கண்டேன். (நான் அங்கு சென்று) அதிலிருந்து ஒரு சிறிய நெருப்பு கொள்ளியை உங்களிடம் நான் கொண்டு வரலாம். அல்லது, நெருப்பின் அருகில் ஒரு வழிகாட்டியை நான் பெறலாம்.
Tamil Translation - Abdulhamid Baqawi10. (அவர் தன் குடும்பத்தாருடன் சென்றபொழுது தான் செல்லவேண்டிய வழியை அறியாத நிலையில் தூர் என்னும் மலைமீது) அவர் நெருப்பைக் கண்ட சமயத்தில் தன் குடும்பத்தாரை நோக்கி ‘‘நீங்கள் (இங்கு சிறிது) தாமதித்திருங்கள். மெய்யாகவே நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். அதிலிருந்து ஓர் எரி கொள்ளியை எடுத்துக்கொண்டு உங்களிடம் வருகிறேன். அல்லது நெருப்பி(ன் வெளிச்சத்தி)னால் (நாம் செல்லவேண்டிய) வழியை அறிந்து கொள்வேன்'' என்றார்.