caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 71

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:71

قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَّا ذَلُولٌ تُثِيرُ ٱلْأَرْضَ وَلَا تَسْقِى ٱلْحَرْثَ مُسَلَّمَةٌ لَّا شِيَةَ فِيهَا قَالُوا۟ ٱلْـَٰٔنَ جِئْتَ بِٱلْحَقِّ فَذَبَحُوهَا وَمَا كَادُوا۟ يَفْعَلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version"நிச்சயமாக அது நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தப்படாத, (விளை) நிலத்திற்கு நீர் இறைக்காத பசு; குறையற்றது; அதில் வடு அறவே இல்லை" என்று அவன் கூறுகிறான் என (மூஸா) கூறினார். "இப்போதுதான் உண்மையைக் கொண்டு வந்தீர்" எனக் கூறி அதை அறுத்தார்கள். அவர்கள் (அதை விரைவாக) செய்ய நெருங்கவில்லை.
Tamil Translation - Omar Sharif(மூஸா) கூறினார்: “நிச்சயமாக அது நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தப்படாத, (விளை) நிலத்திற்கு நீர் இறைக்காத பசுவாகும். (அது) குறையற்றதாகும். அதில் வடு அறவே இல்லை” என்று அவன் கூறுகிறான்.. “நீர் இப்போதுதான் உண்மையைக் கொண்டு வந்தீர்” என அவர்கள் கூறினார்கள். ஆக, (பல கேள்விகளுக்குப் பின்னர்) அவர்கள் அதை அறுத்தார்கள். ஆனால், (அதை) விரைவாக செய்ய அவர்கள் நெருங்கவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi71. (அதற்கு மூஸா) “நிச்சயமாக அது பூமியில் உழவடிப்பதற்கும், பயிருக்குத் தண்ணீர் இறைப்பதற்கும் பயன்படுத்தப்படாத, அதில் அறவே வடுவில்லாத குறையற்ற ஒரு மாடு'' என்று அவன் கூறுகிறான் என்றார். (அதற்கு) அவர்கள் ''இப்பொழுதுதான் நீர் சரியான விவரம் கொண்டு வந்தீர்'' எனக் கூறிய பின்னும் அவர்கள் அறுக்க மனமின்றியே அதை அறுத்தார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70