caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 70

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:70

قَالُوا۟ ٱدْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِىَ إِنَّ ٱلْبَقَرَ تَشَٰبَهَ عَلَيْنَا وَإِنَّآ إِن شَآءَ ٱللَّهُ لَمُهْتَدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version"எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அது எது (வேலைக்கு பயன்படுத்தப்பட்டதா இல்லையா)? என எங்களுக்கு அவன் விவரிப்பான். மாடுகள் எங்களுக்கு குழப்பமாகிவிட்டன. நிச்சயமாக நாங்கள் அல்லாஹ் நாடினால் திட்டமாக நேர்வழி பெறுவோம்" எனக் கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharif(மூஸாவின் சமுதாயத்தினர்) கூறினார்கள்: “எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அது எது (வேலைக்கு பயன்படுத்தப்பட்டதா, இல்லையா)? என எங்களுக்கு அவன் விவரிப்பான். மாடுகள் (பல வகைகளாக இருப்பதால் அவற்றில் எதை நாங்கள் அறுக்க வேண்டும் என்பதில் அவை) எங்களுக்கு குழப்பமாக (சந்தேகமாக) இருக்கின்றன. நிச்சயமாக நாங்கள் அல்லாஹ் நாடினால் திட்டமாக நேர்வழி பெறுவோம்.”
Tamil Translation - Abdulhamid Baqawi70. அதற்கவர்கள் நிச்சயமாக அம்மாடு (எது என) எங்களுக்குச் சந்தேகமாக இருக்கிறது. அது எது? (வேலை செய்து பழகியதா) என எங்களுக்கு விவரித்து அறிவிக்கும்படி உமது இறைவனைக் கேட்பீராக. அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாங்கள் (இவ்விஷயத்தில்) நேர்வழி பெற்றுவிடுவோம்'' எனக் கூறினார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70