إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ سَوَآءٌ عَلَيْهِمْ ءَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நிராகரிப்பாளர்கள் - அவர்களை நீர் எச்சரித்தாலும் அல்லது அவர்களை நீர் எச்சரிக்கவில்லையென்றாலும் (அது) அவர்கள் மீது சமம்தான் - நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக எவர்கள் (மன முரண்டாக) நிராகரித்தார்களோ அவர்களை நீர் எச்சரித்தாலும், அல்லது அவர்களை நீர் எச்சரிக்கவில்லையென்றாலும் (அது) அவர்கள் மீது சமம்தான். அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. (நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை மனமுரண்டாக) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், எச்சரிக்கை செய்யாதிருப்பதும் உண்மையில் சமமே. அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.