caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 7

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:7

خَتَمَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَعَلَىٰ سَمْعِهِمْ وَعَلَىٰٓ أَبْصَٰرِهِمْ غِشَٰوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களின் உள்ளங்கள் மீதும், அவர்களின் கேள்விப் புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டான். அவர்களின் பார்வைகள் மீதும் திரையிருக்கிறது. இன்னும் அவர்களுக்கு பெரிய வேதனை உண்டு.
Tamil Translation - Omar Sharifஅவர்களின் உள்ளங்கள் மீதும், அவர்களின் செவியின் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டான். இன்னும், அவர்களின் பார்வைகள் மீதும் திரையிருக்கிறது. இன்னும், அவர்களுக்கு (மறுமையில்) பெரிய தண்டனை உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi7. (அவர்கள் மனமுரண்டாக நிராகரித்ததன் காரணமாக) அவர்களுடைய உள்ளங்களின் மீதும், கேள்விப்புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களுடைய பார்வைகளின் மீதும் திரையிடப்பட்டு விட்டது. தவிர, அவர்களுக்கு கொடிய வேதனையும் உண்டு.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70