caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 49

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:49

وَإِذْ نَجَّيْنَٰكُم مِّنْ ءَالِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوٓءَ ٱلْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَآءَكُمْ وَفِى ذَٰلِكُم بَلَآءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஃபிர்அவ்னுடைய கூட்டத்திடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றிய சமயத்தை நினைவு கூருங்கள். உங்களுக்கு தீய வேதனையால் சிரமம் தந்தார்கள். உங்கள் ஆண் பிள்ளைகளை அறுத்தார்கள். உங்கள் பெண் (பிள்ளை)களை வாழ விட்டார்கள். அதில் உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரிய சோதனை இருந்தது.
Tamil Translation - Omar Sharifஇன்னும், ஃபிர்அவ்னுடைய கூட்டத்திடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றிய சமயத்தை நினைவு கூருங்கள். அவர்கள் உங்களுக்கு தீய தண்டனையால் கடும் சிரமம் (-துன்பம்) தந்தார்கள். உங்கள் ஆண் பிள்ளைகளை அறுத்தார்கள். இன்னும், உங்கள் பெண் (பிள்ளை)களை வாழ விட்டார்கள். இன்னும், அதில் - உங்கள் இறைவனிடமிருந்து - ஒரு பெரிய சோதனை இருந்தது.
Tamil Translation - Abdulhamid Baqawi49. மேலும், உங்களுக்குத் தீய நோவினை செய்து கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிலிருந்து நாம் உங்களை விடுவித்தோம். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு உங்கள் பெண் (பிள்ளை)களை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். அதில் உங்கள் இறைவனுடைய ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70