وَٱتَّقُوا۟ يَوْمًا لَّا تَجْزِى نَفْسٌ عَن نَّفْسٍ شَيْـًٔا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَٰعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنصَرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒரு நாளை அஞ்சுங்கள்: (அதில்) ஓர் ஆன்மா (வேறு) ஓர் ஆன்மாவுக்கு ஒன்றையும் பலனளிக்காது; அதனிடமிருந்து பரிந்துரை ஏற்கப்படாது; அதனிடமிருந்து பரிகாரம் (பிணைத் தொகை) வாங்கப்படாது; அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், ஒரு நாளை அஞ்சுங்கள்! (அதில்) ஓர் ஆன்மா (வேறு) ஓர் ஆன்மாவுக்கு எதையும் பலனளிக்காது. இன்னும் அதனிடமிருந்து பரிந்துரை ஏற்கப்படாது. இன்னும் அதனிடமிருந்து மீட்புத் தொகை வாங்கப்படாது. இன்னும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi48. நீங்கள் ஒருநாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள்: (அந்நாளில்) எந்த ஆத்மாவும் எந்த ஆத்மாவுக்கும் எதையும் (கொடுத்து அதன் கஷ்டத்தைத்) தீர்க்க மாட்டாது. அதற்காக (எவருடைய) பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அதற்காக ஒரு பரிகாரத்தையும் (ஈடாகப்) பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும், அவர்கள் (எவராலும் எவ்வித) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.