caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 41

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:41

وَءَامِنُوا۟ بِمَآ أَنزَلْتُ مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ وَلَا تَكُونُوٓا۟ أَوَّلَ كَافِرٍۭ بِهِۦ وَلَا تَشْتَرُوا۟ بِـَٔايَٰتِى ثَمَنًا قَلِيلًا وَإِيَّٰىَ فَٱتَّقُونِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களிடமுள்ளதை உண்மைப் படுத்தக்கூடியதாக நான் இறக்கிய (இவ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள்; அதை நிராகரிப்பவர்களில் முதலாமவர்களாக ஆகிவிடாதீர்கள்; என் வசனங்களுக்குப் பகரமாக சொற்ப கிரயத்தை வாங்காதீர்கள்; என்னையே அஞ்சுங்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், உங்களிடமுள்ளதை உண்மைப்படுத்தக்கூடியதாக நான் இறக்கிய (இவ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள்! இன்னும் இதை நிராகரிப்பவர்களில் முதலாமவர்களாக நீங்கள் ஆகிவிடாதீர்கள்! இன்னும், என் வசனங்களுக்குப் பகரமாக (அவற்றில் கூறப்பட்ட சட்டங்களை மறைப்பதற்காக அல்லது, மாற்றுவதற்காக) சொற்ப கிரயத்தை வாங்காதீர்கள்! இன்னும், நீங்கள் என்னையே அஞ்சுங்கள்!
Tamil Translation - Abdulhamid Baqawi41. நான் இறக்கிய (இவ்வேதத்)தை நீங்கள் நம்புங்கள். இது உங்களிடமுள்ள (‘தவ்றாத்' என்னும் வேதத்)தையும் உண்மையாக்கி வைக்கிறது. இதை நிராகரிப்பவர்களில் நீங்களே முதன்மையானவர்களாக ஆகிவிட வேண்டாம். (இவ்வேதத்தைப் பற்றி உங்களிடமுள்ள ‘தவ்றாத்'தில் கூறப்பட்டுள்ள) என் வசனங்களை (மாற்றிச்) சொற்ப விலைக்கு விற்றுவிட வேண்டாம். நீங்கள் (மற்ற எவருக்கும் பயப்படாது) எனக்கே பயப்படுங்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70