يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱذْكُرُوا۟ نِعْمَتِىَ ٱلَّتِىٓ أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَوْفُوا۟ بِعَهْدِىٓ أُوفِ بِعَهْدِكُمْ وَإِيَّٰىَ فَٱرْهَبُونِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇஸ்ராயீலின் சந்ததிகளே! உங்கள் மீது நான் அருள் புரிந்த என் அருளை நினைவு கூருங்கள்; என் வாக்கை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்கை நிறைவேற்றுவேன். என்னையே பயப்படுங்கள்.
Tamil Translation - Omar Sharifஇஸ்ராயீலின் சந்ததிகளே! உங்கள் மீது நான் அருள் புரிந்த என் அருளை நினைவு கூருங்கள். இன்னும், எனது உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். நான் உங்கள் உடன்படிக்கையை நிறைவேற்றுவேன். இன்னும், என்னையே நீங்கள் பயப்படுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi40. இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு நான் அருள் புரிந்திருந்த என் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். நீங்கள் எனக்களித்த வாக்கை நிறைவேற்றுங்கள், நான் உங்களுக்களித்த வாக்கை நிறைவேற்றுவேன். என்னையே (பயந்து) அஞ்சுங்கள்.