وَٱتَّقُوا۟ يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى ٱللَّهِ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒரு நாளை அஞ்சுங்கள். அதில் அல்லாஹ்வின் பக்கம் மீட்கப்படுவீர்கள். பிறகு, எல்லா ஆன்மாக்களுக்கும் அவை செய்தவற்றை முழுமையாகக் கொடுக்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், ஒரு நாளை அஞ்சுங்கள். அதில் அல்லாஹ்வின் பக்கம் நீங்கள் திரும்ப கொண்டுவரப்படுவீர்கள். பிறகு, ஒவ்வொரு ஆன்மாவுக்கும் அது செய்தது(டைய கூலி) முழுமையாகக் கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi281. மேலும், ஒரு நாளைப் பற்றிப் பயப்படுங்கள். அந்நாளில் (கடன் வாங்கியவர்கள், கொடுத்தவர்கள் ஆக) நீங்கள் (அனைவரும்) அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவீர்கள். ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவை செய்த செயல்களுக்கு முழுமையாகக் (கூலி) கொடுக்கப்படும். மேலும், அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.