caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 280

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:280

وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَىٰ مَيْسَرَةٍ وَأَن تَصَدَّقُوا۟ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவறியவன் (கடன் வாங்கி) இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசமளித்தல் வேண்டும். (நன்மையை) நீங்கள் அறிந்திருந்தால் (அதை அவனுக்கே) நீங்கள் தர்மம் செய்வது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், வறியவர் (கடன் வாங்கி) இருந்தால் வசதி ஏற்படும் வரை (அவருக்கு) அவகாசமளித்தல் வேண்டும். இன்னும், (தர்மத்தின் நன்மையை) நீங்கள் அறிந்திருந்தால் (அதை அந்த வறியவருக்கே) நீங்கள் தர்மம் செய்வது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi280. மேலும், (கடன் வாங்கியவன் அதைத் தவணைப்படி தீர்க்க முடியாமல்) அவன் சிரமத்திலிருந்தால் (அவனுக்கு) வசதி ஏற்படும் வரை எதிர்பார்த்திருங்கள். மேலும், (இதிலுள்ள நன்மைகளை) நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (அதை அவனுக்கே) நீங்கள் தானம் செய்து விடுவது (பிறருக்கு தானம் செய்வதைவிட) உங்களுக்கு மிகவும் நன்மையாகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70