فَإِن لَّمْ تَفْعَلُوا۟ فَأْذَنُوا۟ بِحَرْبٍ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَٰلِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(இவ்வாறு) நீங்கள் செய்யவில்லையெனில் அல்லாஹ் இன்னும் அவனுடைய தூதரிடமிருந்து (உங்கள் மீது நிகழப்போகும்) போரை அறியுங்கள். நீங்கள் திருந்தினால், உங்கள் செல்வங்களின் முதல்கள் உங்களுக்கு உண்டு. (நீங்கள்) அநீதி இழைக்க மாட்டீர்கள்; அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, (அவ்வாறு) நீங்கள் செய்யவில்லையெனில் அல்லாஹ் இன்னும் அவனுடைய தூதரிடமிருந்து (உங்கள் மீது நிகழப்போகும்) ஒரு போரை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் (வட்டியிலிருந்து) திருந்தினால், உங்கள் செல்வங்களின் மூலதனம் உங்களுக்கு உண்டு. நீங்கள் (வட்டியைக் கேட்டு பிறருக்கு) அநீதி இழைக்காதீர்கள்; இன்னும், (உங்கள் அசல் தொகையை உங்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படாமல்) நீங்களும் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi279. இப்படி நீங்கள் நடக்காவிட்டால் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் செய்யத் தயாராகி விடுங்கள். ஆயினும், நீங்கள் (வட்டி வாங்கியது பற்றி மனம் வருந்தி திருந்தி) பாவமன்னிப்பு கோரினால், உங்கள் பொருள்களின் அசல் தொகைகள் உங்களுக்கு உண்டு. (எவரும் அதை எடுத்துக்கொண்டு) உங்களுக்கு அநியாயம் செய்துவிட முடியாது. (அவ்வாறே) நீங்களும் (வட்டி வாங்கி) அநியாயம் செய்தவர்களாக மாட்டீர்கள்!