caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 275

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:275

ٱلَّذِينَ يَأْكُلُونَ ٱلرِّبَوٰا۟ لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ ٱلَّذِى يَتَخَبَّطُهُ ٱلشَّيْطَٰنُ مِنَ ٱلْمَسِّ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوٓا۟ إِنَّمَا ٱلْبَيْعُ مِثْلُ ٱلرِّبَوٰا۟ وَأَحَلَّ ٱللَّهُ ٱلْبَيْعَ وَحَرَّمَ ٱلرِّبَوٰا۟ فَمَن جَآءَهُۥ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِۦ فَٱنتَهَىٰ فَلَهُۥ مَا سَلَفَ وَأَمْرُهُۥٓ إِلَى ٱللَّهِ وَمَنْ عَادَ فَأُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ هُمْ فِيهَا خَٰلِدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவட்டியைத் திண்பவர்கள் ஷைத்தான் தாக்கி பைத்தியம் பிடித்தவன் எழுவதுபோன்றே தவிர எழமாட்டார்கள். அது, "வியாபாரமெல்லாம் வட்டியைப் போன்றுதான்" என நிச்சயமாக அவர்கள் கூறிய காரணத்தினாலாகும். அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கினான்; வட்டியைத் தடுத்தான். யார் தம் இறைவனிடமிருந்து உபதேசம் தமக்கு வர, (வட்டியை விட்டு) விலகினால், (வட்டியில்) முன்சென்றது அவருக்குரியது. அவருடைய காரியம் அல்லாஹ்வின் பக்கம் உள்ளது. (அல்லாஹ் அவரை மன்னிப்பான்.) யார் (உபதேசத்திற்கு பின்னாலும் வட்டியின் பக்கம்) திரும்புவார்களோ அவர்கள் நரகவாசிகள்தான் அதில் அவர்கள் நிரந்தரமானவர்கள்.
Tamil Translation - Omar Sharifவட்டியைத் தின்பவர்கள் ஷைத்தான் தாக்கி பைத்தியம் பிடித்தவன் எழுவது போன்றே தவிர (மறுமையில்) எழ மாட்டார்கள். அதற்கு காரணம், “வியாபாரமெல்லாம் வட்டியைப் போன்றுதான்’’ என நிச்சயமாக அவர்கள் கூறியதாகும். அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கினான்; வட்டியைத் தடை செய்தான். ஆக, யார் தனது இறைவனிடமிருந்து உபதேசம் தனக்கு வந்த பிறகு, (வட்டியை விட்டு) அவர் விலகினால், (வட்டியில்) முன்னர் சென்றது (-வட்டி தடுக்கப்படுவதற்கு முன்னர் அவர் வாங்கிய வட்டி) அவருக்குரியது. அவருடைய காரியம் அல்லாஹ்வின் பக்கம் உள்ளது. (அல்லாஹ் அவரை மன்னிப்பான்.) யார் (உபதேசத்திற்குப் பின்னரும் வட்டியின் பக்கம்) திரும்புவார்களோ அவர்கள் நரகவாசிகள்தான் அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi275. வட்டி (வாங்கித்) தின்பவர்கள் ஷைத்தான் பிடித்துப் பித்தம் கொண்டவர்கள் எழும்புவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழும்பமாட்டார்கள். காரணமாவது: ‘‘வட்டியைப் போலவே நிச்சயமாக வணிகமும் இருக்க, அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி வைத்து வட்டியை (ஏன்) தடுத்துவிட்டான்?'' என்று அவர்கள் (பரிகாசமாகக்) கூறியதுதான். (வட்டி வாங்கக்கூடாது என்று) இறைவனிடமிருந்து வந்த அறிவுரைப்படி யாராவது (உங்களில் அதை விட்டு) விலகிக் கொண்டால் (அதற்கு) முன் (அவர் வாங்கிச்) சென்றுபோனது அவருக்குரியதே. (இதற்கு முன் வட்டி வாங்கிய) அவருடைய விஷயம் அல்லாஹ்விடமிருக்கிறது. (அல்லாஹ்வின் உத்தரவு வந்தபின் வட்டியை விட்டு விட்டதினால் அல்லாஹ் அவரை மன்னித்து விடலாம்.) தவிர, (இந்த உத்தரவு கிடைத்த பின்) எவரேனும் பிறகும் (வட்டியின் பக்கம்) திரும்பினால் அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70