ٱلشَّيْطَٰنُ يَعِدُكُمُ ٱلْفَقْرَ وَيَأْمُرُكُم بِٱلْفَحْشَآءِ وَٱللَّهُ يَعِدُكُم مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஷைத்தான் உங்களுக்கு வறுமையை அச்சுறுத்தி, மானக்கேடான (கஞ்சத்தனத்)தை உங்களுக்கு ஏவுகிறான். அல்லாஹ் (உங்கள் தர்மத்திற்கு) தன்னிடமிருந்து மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் விசாலமானவன், மிக அறிந்தவன்.
Tamil Translation - Omar Sharifஷைத்தான் உங்களுக்கு வறுமையை அச்சுறுத்துகிறான். இன்னும், மானக்கேடான (கஞ்சத்தனத்)தை உங்களுக்கு ஏவுகிறான். அல்லாஹ் (உங்கள் தர்மத்திற்கு) தன்னிடமிருந்து மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi268. (நீங்கள் தர்மம் செய்தால்) ஷைத்தான் உங்களுக்கு வறுமையைக் கொண்டு பயங்காட்டி மானக்கேடான (கஞ்சத்தனத்)தைச் செய்யும்படி உங்களைத் தூண்டுவான். ஆனால், அல்லாஹ்வோ (நீங்கள் தர்மம் செய்தால்) தன் மன்னிப்பையும், செல்வத்தையும் (உங்களுக்குத் தருவதாக) வாக்களிக்கிறான். மேலும், அல்லாஹ் (வழங்குவதில்) மிக்க விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான்.