caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 261

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:261

مَّثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمْ فِى سَبِيلِ ٱللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِى كُلِّ سُنۢبُلَةٍ مِّا۟ئَةُ حَبَّةٍ وَٱللَّهُ يُضَٰعِفُ لِمَن يَشَآءُ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களை தர்மம் புரிபவர்களின் உதாரணம், ஏழு கதிர்களை முளைக்க வைத்த ஒரு விதையின் உதாரணத்தைப் போன்றதாகும். ஒவ்வொரு கதிரிலும் நூறு விதை(கள் வந்தன). அல்லாஹ், தான் நாடுபவர்களுக்கு (நற்கூலியை)ப் பன்மடங்காக்குகிறான். அல்லாஹ் விசாலமானவன், மிக அறிந்தவன்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களை தர்மம் புரிபவர்களின் உதாரணம், ஏழு கதிர்களை முளைக்க வைத்த ஒரு விதையின் உதாரணத்தைப் போன்றாகும். ஒவ்வொரு கதிரிலும் நூறு விதைகள் வந்தன. அல்லாஹ், தான் நாடுபவர்களுக்கு (நற்கூலியை)ப் பன்மடங்காக்குகிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi261. (நபியே!) அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களைச் செலவு செய்கிறவர்களுடைய (பொருள்களின்) உதாரணம், ஒரு வித்தின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. அ(ந்த வித்)து ஏழு கதிர்களைத் தந்தது. ஒவ்வொரு கதிரிலும் நூறு வித்துக்கள் (ஆக, எழுநூறு வித்துக்கள் அந்த ஒரு வித்திலிருந்து) உற்பத்தியாயின. அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு (இதை மேலும்,) இரட்டிப்பாக்குகிறான். ஏனெனில், அல்லாஹ் (வழங்குவதில்) மிக விசாலமானவன், நன்கறிந்தவன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70