فَإِن لَّمْ تَفْعَلُوا۟ وَلَن تَفْعَلُوا۟ فَٱتَّقُوا۟ ٱلنَّارَ ٱلَّتِى وَقُودُهَا ٱلنَّاسُ وَٱلْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَٰفِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் (அப்படி) செய்யவில்லையென்றால், -நீங்கள் செய்யவே மாட்டீர்கள் - மக்களும் கற்களும் அதன் எரிபொருளாக இருக்கிற (நரக) நெருப்பை அஞ்சுங்கள். அது நிராகரிப்பாளர்களுக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.
Tamil Translation - Omar Sharifஆக, நீங்கள் (அப்படி ஒரு வேதத்தை) உருவாக்கவில்லையென்றால், - நீங்கள் (அப்படி) உருவாக்கவே முடியாது - (நரக) நெருப்பை அஞ்சுங்கள். மக்களும் கற்களும் அதன் எரிபொருள் ஆவார்கள். அது நிராகரிப்பாளர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
Tamil Translation - Abdulhamid Baqawi24. நீங்கள் அவ்விதம் (கொண்டுவர) இயலாது போனால் - உங்களால் நிச்சயம் அவ்வாறு செய்ய முடியாது - மனிதர்களும் கற்களும் இரையாகின்ற (நரக) நெருப்புக்குப் பயந்து கொள்ளுங்கள். அது நிராகரிப்பவர்களுக்கென தயார் செய்யப்பட்டுள்ளது.