caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 23

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:23

وَإِن كُنتُمْ فِى رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا۟ بِسُورَةٍ مِّن مِّثْلِهِۦ وَٱدْعُوا۟ شُهَدَآءَكُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمْ صَٰدِقِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம் அடிமை மீது நாம் இறக்கியதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். அல்லாஹ் அல்லாத உங்கள் ஆதரவாளர்களையும் (இதற்காக) அழையுங்கள்.
Tamil Translation - Omar Sharifநாம் நம் அடிமை மீது இறக்கிய (வேதத்)தில் (அது இறைவனிடமிருந்து இறக்கப்பட்டது என்பதில்) நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், அது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இன்னும், அல்லாஹ் அல்லாத உங்கள் ஆதரவாளர்களையும் (உங்கள் உதவிக்காக) நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (இதை செய்து காட்டுங்கள்).
Tamil Translation - Abdulhamid Baqawi23. நாம் (நம் தூதர் முஹம்மது என்னும்) நம் அடியாருக்கு இறக்கிய இ(வ்வேதத்)தில் நீங்கள் சந்தேகப்பட்டு (இது அல்லாஹ்வினால் அருளப்பட்டதல்ல என்று கூறுகின்ற) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர உங்களை ஆமோதிப்பவர்களையும் (திறமையாளர்களையும் உதவியாளர்களையும்) நீங்கள் அழைத்து(ச் சேர்த்து)க்கொண்டு இதைப் போன்ற ஓர் அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டுவாருங்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70