caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 22

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:22

ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ فِرَٰشًا وَٱلسَّمَآءَ بِنَآءً وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَأَخْرَجَ بِهِۦ مِنَ ٱلثَّمَرَٰتِ رِزْقًا لَّكُمْ فَلَا تَجْعَلُوا۟ لِلَّهِ أَندَادًا وَأَنتُمْ تَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் ஆக்கினான். இன்னும், வானத்திலிருந்து (மழை) நீரை இறக்கினான். அதன் மூலம் உங்களுக்கு கனிகளிலிருந்து உணவை உற்பத்தி செய்தான். ஆகவே, நீங்கள் அறிய, அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
Tamil Translation - Omar Sharifஅவன் பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் ஆக்கினான். இன்னும், வானத்தி(ன் மேகத்தி)லிருந்து (மழை) நீரை இறக்கினான். ஆக, அதன் மூலம் உங்களுக்கு (பல விதமான) கனிகளிலிருந்து உணவை உற்பத்தி செய்(து கொடுத்)தான். ஆகவே, (இந்த உண்மையை) நீங்கள் அறிந்தவர்களாக இருக்கும் நிலையில், அல்லாஹ்விற்கு நிகரானவர்களை (-பொய்யான இணை தெய்வங்களை) ஏற்படுத்தாதீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi22. அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து, அதைக் கொண்டு (நீங்கள்) புசிக்கக்கூடிய கனிவர்க்கங்களையும் உங்களுக்கு வெளியாக்குகிறான். ஆகவே, (இவற்றையெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு இணைகளை ஆக்காதீர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70