caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 225

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:225

لَّا يُؤَاخِذُكُمُ ٱللَّهُ بِٱللَّغْوِ فِىٓ أَيْمَٰنِكُمْ وَلَٰكِن يُؤَاخِذُكُم بِمَا كَسَبَتْ قُلُوبُكُمْ وَٱللَّهُ غَفُورٌ حَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்கமாட்டான். எனினும், உங்கள் உள்ளங்கள் (உறுதி) செய்தவற்றிற்காக (அதை நீங்கள் நிறைவேற்றவில்லையாயின்) அவன் உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் சகிப்பாளன்.
Tamil Translation - Omar Sharifஉங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்கமாட்டான். எனினும், உங்கள் உள்ளங்கள் செய்த (உறுதியான சத்தியத்)திற்காக (அதை நீங்கள் நிறைவேற்றவில்லை என்றால்) அவன் உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் சகிப்பாளன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi225. (மனதில் நாட்டமின்றி, பொய் இல்லாமல் அடிக்கடி நீங்கள் செய்யும்) வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை குற்றம் பிடிப்பதில்லை. ஆனால், உங்கள் உள்ளங்கள் (உறுதியுடன்) செய்யும் சத்தியங்களுக்காக, (அதை நீங்கள் நிறைவேற்றவில்லையாயின்) அவன் உங்களை குற்றம் பிடிப்பான். அல்லாஹ் (குற்றங்களை) மிக்க மன்னிப்பவன், அதிகம் பொறுமை உடையவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70