لِّلَّذِينَ يُؤْلُونَ مِن نِّسَآئِهِمْ تَرَبُّصُ أَرْبَعَةِ أَشْهُرٍ فَإِن فَآءُو فَإِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதங்கள் மனைவிகளிடம் ஈலா[1] செய்பவர்களுக்கு நான்கு மாதங்கள் எதிர்பார்ப்பது உண்டு. (அதற்குள்) அவர்கள் மீண்டுவிட்டால் (அது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது.) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.
Tamil Translation - Omar Sharifதங்கள் மனைவிகளிடம் ஈலா[1] செய்பவர்களுக்கு நான்கு மாதங்கள் எதிர்பார்ப்பதற்கு அனுமதி உண்டு. (அதற்குள்) அவர்கள் (தங்கள் மனைவிகளுடன்) மீண்டுவிட்டால் (அவர்களுக்குள் பிரிவு ஏற்படாது. அவர் செய்த ஈலாவை அல்லாஹ் மன்னித்து விடுவான்.) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi226. தங்கள் மனைவிகளுடன் சேருவதில்லை என்று சத்தியம் செய்து கொண்டவர்களுக்கு நான்கு மாதங்கள் தாமதிக்க அனுமதியுண்டு. ஆகவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்து) கொண்டால் (அல்லாஹ் அவர்களை மன்னித்திடுவான். ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன் ஆவான்.