يَسْـَٔلُونَكَ مَاذَا يُنفِقُونَ قُلْ مَآ أَنفَقْتُم مِّنْ خَيْرٍ فَلِلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ وَٱلْيَتَٰمَىٰ وَٱلْمَسَٰكِينِ وَٱبْنِ ٱلسَّبِيلِ وَمَا تَفْعَلُوا۟ مِنْ خَيْرٍ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் "எதைத் தர்மம் புரியவேண்டும்?" என்று உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: "செல்வத்திலிருந்து நீங்கள் எதைத் தர்மம் செய்தாலும் (அது) பெற்றோர், உறவினர்கள், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்களுக்கு (செய்யவேண்டும்). நன்மையிலிருந்து நீங்கள் எதைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை மிக அறிபவன் ஆவான்."
Tamil Translation - Omar Sharif“எதை அவர்கள் தர்மம் புரியவேண்டும்?’’ என்று உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: “செல்வத்திலிருந்து நீங்கள் எதைத் தர்மம் செய்தாலும் அது பெற்றோர், உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்களுக்கு செய்யப்பட வேண்டும். நீங்கள் நன்மை எதைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறி(ந்து உங்களுக்கு அதற்கேற்ப கூலி கொடுப்)பவன் ஆவான்.’’
Tamil Translation - Abdulhamid Baqawi215. (நபியே! பொருள்களில்) ‘‘எதைச் செலவு செய்வது? (யாருக்குக் கொடுப்பது?)'' என்று உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: (நன்மையைக் கருதி) ‘‘நீங்கள் எத்தகைய பொருளைச் செலவு செய்தபோதிலும் (அதைத்) தாய், தந்தை, சுற்றத்தார், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்குக் கொடுங்கள். இன்னும், நீங்கள் (வேறு) என்ன நன்மையைச் செய்தபோதிலும் அதையும் நிச்சயமாக அல்லாஹ் அறி(ந்து அதற்குரிய கூலியும் தரு)வான்.