فَإِن زَلَلْتُم مِّنۢ بَعْدِ مَا جَآءَتْكُمُ ٱلْبَيِّنَٰتُ فَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதெளிவான சான்றுகள் உங்களுக்கு வந்த பின்னர் நீங்கள் (இஸ்லாமை விட்டு) சறுகினால்... நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, தெளிவான சான்றுகள் உங்களிடம் வந்த பின்னர் நீங்கள் (இஸ்லாமை விட்டு விலகி) வழிதவறி (வழிகேட்டில்) சென்றால் (அல்லாஹ்விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை.) நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi209. (மனிதர்களே! சந்தேகத்திற்கிடமில்லாத) தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் (இஸ்லாமில் உறுதியாக இல்லாமல்) நழுவி விடுவீர்களானால் (உங்களைத் தண்டிப்பதில்) நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும் (உங்களை எவ்விதம் நடத்த வேண்டும் என்பதை நன்கறிந்த) நுண்ணறிவுடையவனும் ஆவான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.