caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 200

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:200

فَإِذَا قَضَيْتُم مَّنَٰسِكَكُمْ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ كَذِكْرِكُمْ ءَابَآءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا فَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِى ٱلدُّنْيَا وَمَا لَهُۥ فِى ٱلْـَٔاخِرَةِ مِنْ خَلَٰقٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் உங்கள் ஹஜ்ஜு கடமைகளை நிறைவேற்றிவிட்டால், நீங்கள் (இஸ்லாமிற்கு முன்) உங்கள் மூதாதை(களின் பெயர்)களை (சப்தமிட்டுப் பெருமையாக) நினைவு கூர்ந்ததைப் போல அல்லது (அதைவிட) கடுமையாக அல்லாஹ்வை நினைவு கூருங்கள். "எங்கள் இறைவா! எங்களுக்கு (வேண்டியவற்றை எல்லாம்) இம்மையில் தா!" என்று கூறுபவரும் மக்களில் உண்டு. (ஆனால்,) அவருக்கு மறுமையில் (யாதொரு) பாக்கியமுமில்லை.
Tamil Translation - Omar Sharifஆக, நீங்கள் உங்கள் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிவிட்டால், நீங்கள் (மினாவில் தங்கி இருக்கும் நாட்களில் இஸ்லாமிற்கு முன்) உங்கள் மூதாதை(களின் பெயர்)களை (சப்தமிட்டுப் பெருமையாக) நினைவு கூர்ந்ததைப் போல அல்லது (அதைவிட) அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூருங்கள். ஆக, “எங்கள் இறைவா! எங்களுக்கு (வேண்டியவற்றை எல்லாம்) இம்மையில் தா!’’ என்று கூறுபவரும் மக்களில் உண்டு. ஆனால், அவருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமுமில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi200. (ஹஜ்ஜூக்குச் சென்ற) நீங்கள் உங்கள் (ஹஜ்ஜின்) கடமைகளை நிறைவேற்றி விட்டால், நீங்கள் (இஸ்லாமிற்கு முன்) உங்கள் மூதாதை(களின் பெயர்)களை (சப்த மிட்டு பெருமையாக) நினைவு கூர்ந்து கூறிவந்ததைப்போல் அல்லது அதைவிட அதிகமாக அல்லாஹ்வை ‘திக்ரு' (செய்து உங்களுக்கு வேண்டியவற்றையும் அவனிடம் கேட்டுப் பிரார்த்தனை) செய்யுங்கள். (பிரார்த்தனையில்) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு (வேண்டியவற்றை எல்லாம்) இம்மையிலேயே கொடுத்து விடுவாயாக!'' என்று கோருபவரும் மனிதர்களில் உண்டு. ஆனால், இவருக்கு மறுமையில் ஒரு பாக்கியமும் இல்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70